"கடைசி பெஞ்ச் இல்லை..”- இனி பள்ளிகளில் 'ப' வடிவில் அமர வேண்டும்- கல்வித்துறை உத்...
ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் யானிக் சின்னர், கார்லோஸ் அல்கராஸ் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள்.
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், யானிக் சின்னர் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார்.
முதல் செர்வில் சின்னர் 81 சதவிகிதம் வெல்ல ஜோகோவிச் 77 சதவிகிதம் வென்றார்.
இரண்டாம் செர்வில் சின்னர் 71 சதவிகிதம் வெல்ல, ஜோகோவிச் 17 சதவிகிதம் மட்டுமே வென்றார். இதுதான் ஜோகோவிச்சின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அடுத்ததாக மற்றுமொரு அரையிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ், கார்லோஸ் அல்கராஸ் மோதினார்கள். இந்தப் போட்டியில் 6-4, 5-7, 6-3, 7(8)-6 என்ற செட்களில் அல்கராஸ் வென்றார்.
ஹாட்ரிக் கோப்பை வெல்லும் முனைப்பில் அல்கராஸ் இருக்கிறார்.
டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.