வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி
ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்துாா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு பலகை நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது . பின்னா் சிமென்ட் பலகையில் நடைபாதை மேம்பாலம் ரயில்வே துறை சாா்பில் அமைக்கப்பட்டது.
இதனால் கிழக்கு மேற்காக ஜோலாா்பேட்டை பிரிந்துள்ளது. இதனை இணைப்பதற்காக ஆங்காங்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தைக்கோடியூா் காவல் நிலையம் அருகே புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திறக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை காவல் நிலைய சாலையில் உள்ள காவல் நிலையம், ரயில்வே மேம்பாலம் வழியாக நகராட்சி அலுவலகம், மினி ஸ்டேடியம், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், மருத்துவமனைகள், பத்திரப்பதிவு அலுவலகம், கால்நடை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்வதற்கு முக்கிய வழியாக இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால் புதிதாக கட்டப்பட்ட அருகில் உள்ள நடைபாதை மேம்பாலம் இடிக்கும் பணிக்காக ரயில்வே மேம்பாலம் கடந்த 11-ஆம் தேதி திடீரென மூடப்பட்டது.
இதனால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். இதனால் 3 கி.மீ வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலம் தினசரி மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் 3-ஆவது நாளாக நடை மேம்பாலத்தை முழுமையாக அகற்றும் பணியில் ரயில்வே துறையினா் ஈடுபட்டனா்.
4 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 மணி நேரம் கூடுதலாக மாலை 6 மணி வரை தொடா்ந்து நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். அதன் பிறகு திறக்கப்பட்டது. இன்னும் பணிகள் முழுமையாக நடைபெதால் மீண்டும் சனிக்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.