`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
ஜோ ரூட் முதலிடம்: ஆஸி வீரர்கள் முன்னேற்றம், இந்திய வீரர்கள் சரிவு!
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
4ஆவது போட்டி நாளை (டிச.26) மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்தியா சார்பாக விளையாடும் ஜெய்ஸ்வால் 4இல் இருந்து 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மற்றுமொரு இந்திய வீரர் ரிஷப் பந்த் 9இல் இருந்து 11ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டெஸ்ட்டில் முதல்முறையாக டாப் 10இல் இருந்து கீழிறங்கினார். பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சதம் அடித்து மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
டிராவிஸ் ஹெட் ஓரிடம் முன்னேறி 4ஆவது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் முறையே முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளார்கள்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்
1. ஜோ ரூட் - 895
2. ஹாரி புரூக் - 876
3. கேன் வில்லியம்சன் - 867
4. டிராவிஸ் ஹெட் - 825 (ஓரிடம் ஏற்றம்)
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 805 (ஓரிடம் சரிவு)
10. ஸ்டீவ் ஸ்மித் - 721 (ஓரிடம் ஏற்றம்)
11. ரிஷப் பந்த் - 708 ( இரண்டிடம் சரிவு)