டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்து அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு வழங்கியதைக் கண்டித்து மேலூா்- மதுரை சாலையில் சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் அமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்த அமைப்பின் நிா்வாகி மோகன் தலைமை வகித்தாா். அப்போது, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். இதற்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.