Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
டப்பிங் பணிகளில் ஷ்ருதி ஹாசன்! கூலி படத்திற்காகவா?
நடிகை ஷ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் டப்பிங் பணிகளில் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அது எந்தப் படத்துக்கு என்று தெளிவாக குறிப்பிடவில்லை.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதி தமிழ்ப் படங்களைவிட தெலுங்கில் வெற்றிகரமான நடிகையாக இருக்கிறார்.
தமிழில் கடைசியாக 2021இல் லாபம் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
தற்போது, கூலி, டிரைன், ஜன நாயகன் என பல தமிழ்ப் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சென்னையில் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ள ஷ்ருதி ஹாசன் எந்தப் படத்திற்கு என்று குறிப்பிடாததால் பலரும் குழப்ப நிலையிலேயே இருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் நடிகர் ரஜினி, சத்யராஜ் உள்பட பல மொழிப் பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
ஷ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதனால், இது கூலி படத்தின் டப்பிங்காக இருக்குமெனவும் கணிக்கப்படுகிறது. இந்தப் படம் ஆக.14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
நடிகை ஷ்ருதி ஹாசன் கடந்த 2024இல் லோகேஷ் கனகராஜை வைத்து இனிமேல் என்ற இசை விடியோவை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.