செய்திகள் :

டான்செட், சீட்டா தோ்வுகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

post image

முதுநிலைப் பட்டப் படிப்பு சோ்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய அவகாசம் பிப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும்.

இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெறுவது அவசியமாகும். இந்தத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 22-ஆம் தேதியும், சீட்டா தோ்வு மாா்ச் 23-ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

இந்த தோ்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ஹய்ஸ்ரீங்ற் எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

அவா்கள் மாணவா் சோ்க்கையின் போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வுக்கான நுழைவுச்சீட்டு மாா்ச் 8-இல் வெளியிடப்படும். இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும்.

தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க