செய்திகள் :

``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம்

post image

2013-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன்.

'2024- 2025 நிதியாண்டில், இந்தியா ஜி.டி.பி 6.4 சதவிகிதமாக இருக்கலாம். இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு' என தேசிய புள்ளிவிவரம் அலுவலகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின் படி, 'கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மக்களின் தனிப்பட்ட நுகர்வு 6 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும், அதற்கு முந்தைய காலாண்டில் அதற்கு முன்பான ஏழு காலாண்டில் இல்லாத அளவுக்கு 7.4 சதவிகிதமாக நுகர்வு உச்சத்தில் இருந்தது' என்று குறிப்பிட்டிருந்தது.

நடுத்தட்டு மக்கள் பாதிப்பு...

இந்த நிலையில், முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பொருளாதாரம் குறித்து பேசியுள்ளார். அதில்...

"இந்தியாவில் மக்களின் நுகர்வு தேவை பலமாக வளரவில்லை. நுகர்வில் நடுத்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, வேலையின்மையே முக்கிய காரணம். இந்த நுகர்வு பாதிப்பிலிருந்து உயர்தட்டு மக்கள் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.

ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவிகிதம் என்பது இந்தியாவிற்கு போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். இது அரசால் மட்டும் செய்ய முடியாது. தனியார்களும் ஜி.டி.பி வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும்.

Rupee fall
ரூபாய் - டாலர்

இந்திய ரூபாய்க்கு எதிராக மட்டுமல்லாமல் பல நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு வளர்ந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு டாலர் ரூ.83-ல் இருந்து ரூ.86 ஆகத்தான் வளர்ந்துள்ளது. ஆனால், யூரோவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டாலருக்கு 91 சென்டாக இருந்தது. இப்போது அது 98 சென்டாக இருந்தது. அதனால், இது இந்திய ரூபாய் பிரச்னை இல்லை.

டாலர் தற்போது பலப்பட்டு வருகிறது. இதற்கு 'புதிய அரசால் வணிக பற்றாக்குறை மாறும்' என்ற நம்பிக்கையே காரணம். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்து திட்டங்கள் வெளியிடப்பட்டதும் இவை அனைத்தும் சரியாகி விடும். அதனால், இதுக்குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை" என்று பேசியிருக்கிறார்.

Trump: ``டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்" -எச்சரிக்கும் உலக வங்கி

அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில் 'டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம... மேலும் பார்க்க

‘கேஷ்லெஸ் சமூகம்’ ஆக ஸ்வீடன் - பணம் இருந்தும் வாடும் ‘டிஜிட்டல் ஏழை’களைத் தெரியுமா?

‘கேஷ்லெஸ் சமூகம்’உலகம் முழுவதுமே கிரெடிட், டெபிட் கார்டுகள், பணப் பரிவர்த்தனை ஆப்கள் வியாபித்துக் கிடக்கின்றன. ஆனாலும், ஸ்வீடன் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேறு எந்த நாட்டிலும் அதிகமில்லை எனலா... மேலும் பார்க்க

2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமா?! |New Tax Bill

வரும் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வெளியிடப்போகிறார். இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய நேரட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: தி.மலை நெடுஞ்சாலையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட்பாளர் சீதாலட்சுமி?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப... மேலும் பார்க்க