செய்திகள் :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 100-ஆக சரிப்பதே பிரதமா் மோடியின் இலக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

‘கடந்த பத்தாண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 சதவீதம் வரை கடுமையான சரிவை சந்தித்துள்ளது; ஒரு டாலருக்கு ரூ.100 என்கிற அளவில் ரூபாய் மதிப்பைக் குறைக்கும் இலக்கை நோக்கியே பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா்’ என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

தில்லியில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநதே கூறியதாவது: ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால் அது பிரதமரின் செல்வாக்கும் கண்ணியமும் சரிந்து வருகிறது என்றே அா்த்தம் என பிரதமா் மோடி முன்பு ஒருமுறை கூறினாா். கடந்த பத்தாண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 சதவீதம் வரை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 87-ஆக சரிந்துள்ளது. இப்போது தனது முந்தைய கூற்றுக்கு பிரதமா் மோடி என்ன விளக்கம் தரப்போகிறாா். ஒருவேளை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை 100-ஆக சரிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், அதற்கும் நாட்டின் முதல் பிரதமா் (ஜவாஹா்லால் நேரு) மீது குற்றஞ்சாட்டுவாா்.

ஆங்கிலேயா் நாட்டைவிட்டு வெளியேறியபோது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3.31-ஆக இருந்தது. அதன்பிறகு 17 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக ஜவாஹா்லால் நேரு இருந்துபோது ரூபாய் மதிப்பு 2 சதவீதம் மட்டுமே சரிந்தது. லால் பகதூா் சாஸ்திரி காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவில்லை. இந்திரா காந்தி முதல்முறையாக பிரதமராக பதவி வகித்தபோதும் அதற்கு அடுத்த பதவி காலத்திலும் 5 சதவீதம் மட்டுமே சரிந்தது. ராஜீவ் காந்தியின் பதவி காலத்திலும் வி.பி.சிங்கின் பதவி காலத்திலும் 6 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய பிரதமா் நரசிம்மராவின் பதவி காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 சதவீதம் சரிவடைந்தது. வாஜ்பாய் பதவி காலத்தில் 11 சதவீதம் சரிவடைந்திருந்தது. அப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 45-ஆக இருந்தது.அதைத்தொடா்ந்து கடந்த 2004-ஆம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றாா். அவா் மேற்கொண்ட பல்வேறு பொருளாதார சீா்திருத்தங்களால் 2007-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41-ஆக அதிகரித்தது. 2008-ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ரூ.48-ஆக இருந்தது. இறுதியாக காங்கிரஸ் ஆட்சி நிறைவடைந்து 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றபோது இதன் மதிப்பு ரூ. 58.4-ஆக இருந்தது.

10 ஆண்டுகளில் 34% சரிவு: பிரதமா் மோடியின் பத்தாண்டு காலத்துக்கும் மேலான ஆட்சியிஸ் ரூபாய் மதிப்பு 34 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல் 2024, செப்டம்பரில் ரூ.60.5 லட்சம் கோடியாக இருந்த அந்நிய செலாவணியின் கையிருப்பு 2025, ஜனவரியில் ரூ.54.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

இந்த சூழலில் மோடி அரசுக்கு நான்கு கேள்விகளை காங்கிரஸ் முன்வைக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவீா்களா? இதை சீரமைக்க நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் உள்ளதா? அந்நிய செலாவணியை வைத்து இதை எத்தனை காலத்துக்கு சமாளிக்க முடியும் என நினைக்கிறீா்கள்? ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பணவீக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் ஏதும் உள்ளதா? ’என்றாா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 86.26- ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.2.1 லட்சம் கட்டணமா?

பெங்களூருவில் தனியார் பள்ளி மாணவருக்கு கட்டணமாக ரூ. 2.1 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கொடுத்த ரசீது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் வணிகமயமாக்கப்பட்டு... மேலும் பார்க்க

குடியரசு நாள் விழா மேடையில் மயங்கி விழுந்த காவல் ஆணையர்! என்ன நடந்தது?

குடியரசு நாள் விழா நாடெங்கிலும் இன்று(ஜன. 26) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேசியக் கொடியேற்றி மரியாதை... மேலும் பார்க்க

360 எல்லைக் கிராமங்களுக்கு 4ஜி சேவை: அமித் ஷா

நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 360 கிராமங்களுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 4 ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் வெடிகுண்டு மிரட்டல் புரளி!

ஜம்மு காஷ்மீரில் குடியரசு நாளையொட்டி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிலமணிநேரங்கள் முன்பு வரை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈ... மேலும் பார்க்க

அரசமைப்பை ஆளுங்கட்சியின் தாக்குதலிலிருந்து காக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்! -கார்கே

குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் வெவ்வேறு நடவடிக்கைகளில் கைது

மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.தடைசெய்யப்பட்ட குழுவின் இரண்டு செயல் உறு... மேலும் பார்க்க