செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 12 காசுகள் சரிந்து 87.68 ஆக நிறைவடைந்தது.

இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்தும் திட்டங்கள் குறித்த வரைவு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டதைத் தொடர்ந்து, உள்ளநாட்டு பங்குச் சந்தையில், பரவலான விற்பனை அழுத்தம் காணப்பட்டது.

ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித கூடுதல் அமெரிக்க வரி விதிக்கப்படுவதால், இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஏற்பட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பானது தனது வேகத்தை இழந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.74 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.63 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.87.80 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் சரிந்து ரூ.87.68-ஆக முடிந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 4 காசுகள் குறைந்து ரூ.87.56 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் ... மேலும் பார்க்க

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர் பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் 3டி ஆடியோவை வழங்கும் வகையில், 360 டிகிரி கோணத்திலும் ஒலியலைகளை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்துவது குறித்து அமெரிக்கா வரைவு அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து உள்ளநாட்டு பங்குச் சந்தையில், பரவலான விற்பனை அழுத்தம் காரணமாக இன்றைய... மேலும் பார்க்க

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

புதுதில்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானரின் பிராண்ட் பார்ட்னரான பி.எஸ்.ஏ.வி. குளோபல் (PSAV Global), அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்காக மின்னணு ஒப்பந்த உற்பத்திய... மேலும் பார்க்க

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே, தீ, வெள்ளம், பூகம்பங்கள், கலவரங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அபாயங்களுக்கு நிகரான காப்பீடு வழங்கும் புதிய வீட்டுக் காப்பீட்டு திட்டத்தை அறிம... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

மும்பை: வலுவான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீட்சியை தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58 ஆக முடிவடைந்தது.ஆகஸ்ட் 27 கட்டண காலக்கெடுவை அமல்படுத்துவத... மேலும் பார்க்க