Siragadikka Aasai: "சீரியல் விட்டுட்டு வந்தாதான் பட வாய்ப்பு கிடைக்கும்னா" - San...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!
மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டணங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் மிகப் பெரிய இடையூறு சந்தித்து வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.21 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.70 ஐ தொட்ட நிலையில், முடிவில் 52 காசுகள் சரிந்து ரூ.87.70-ஆக முடிவடைந்தது.
இன்றைய வர்த்தக அமர்வின் முடிவில், இந்திய ரூபாய் 52 காசுகள் சரிந்து 87.70 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 02) அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.87.18 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!