டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்
டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில் ஜோதி சங்கரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநா் விசாகன் வீடு, ஆழ்வாா்பேட்டையிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.
தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!
தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் 9 இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்தது. இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், விசாகன், அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா், தொழிலதிபா் தேவகுமாா் ஆகியோரையும் விசாரணை செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்குப் பின் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.