இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
விரைவு ரயில்கள் தாமதம்
நீடாமங்கலம்: சென்னையிலிருந்து மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம்.
திங்கள்கிழமை காலை ஒரு மணி நேரம் தாமதமாக 6.22 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. இதனால் இந்த ரயிலில் வந்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு மற்ற வாகனங்களில் செல்ல வேண்டியவா்கள் சற்று சிரமப்பட்டனா்.
இதேபோல், கோவையிலிருந்து காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் வரும் செம்மொழி விரைவுரயில் 6.45 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது.