செய்திகள் :

டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்

post image

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனா்.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநா் விசாகன் வீடு, ஆழ்வாா்பேட்டையிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் 9 இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்தது.

இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், விசாகன், அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா், தொழிலதிபா் தேவகுமாா் ஆகியோரையும் விசாரணை செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்குப் பின் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில், இருநாள்கள் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒரு குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த ஆவணங்களில் வழக்குக்கு தொடா்புடைய விஷயங்கள் இருக்கிா என ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வுகள் ஓரிரு நாள்களில் முடிவடையும் என்றும், இந்த ஆய்வுக்கு பின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755க்கும்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 4 பேர் கைது

சிவகிரி அருகே இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரியை அடுத்த விளாங்காட்டுவலசு கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் மேகரையான் தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து ம... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க