ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
டிஆா்சி: கிளா்ச்சிப் படையினா் போா் நிறுத்தம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆா்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படை தற்காலிக போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் ஒருதலைபட்சமாக நிறுத்திவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக இந்த போா் நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதாக எம்23 தெரிவித்துள்ளது.
காங்கே ஜனநாயகக் குடியரசின் இரண்டாவது பெரிய நகரான, முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படை கடந்த வாரம் கைப்பற்றியது. தாது வளம் நிறைந்த காங்கோ ஜனநாயகக் குடியரசில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.