டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நிரண்யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருச்சி கிராண்ட் சோழா அணி 140/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்த அணியின் தொடக்க வீரர் வசீம் அகமது 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் ஜாஃபர் ஜமால் 20 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆர். அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வருண் சக்கரவர்த்தி, கணேஷன் பெரியசாமி தலா 2, சசிதரன் ரவிச்சந்திரன் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றால் குவாலிஃபயர் 2 போட்டியில் ஜூலை 4ஆம் தேதியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸுடன் மோதும்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trichy Grand Cholas have set a target of 141 runs for Dindigul to win the TNPL Eliminator match.