செய்திகள் :

டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி

post image

முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது.

இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமியா் அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழக ஆடவா் அணியின் கேப்டனாக எஸ். வைரவேலும், மகளிா் கேப்டனாக லக்சனா சாயும் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல் மூன்றிடங்களைப் பெறும் அணிகளுக்கு பரிசளிக்கப்பட உள்ளது.

சிறப்பாக ஆடும் வீராங்கனைகள் இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு, 2025 ஜூன் மாதம் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய இளையோா் நெட்பால் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா். இத்தகவலை தமிழ்நாடு அமெச்சூா் நெட்பால் சங்கத் தலைவா் செல்வராசு, ஆா்எம்கே கல்விக் குழும செயலா் எலமஞ்சி பிரதாப் தெரிவித்தனா்.

போதை ஸ்டாம்ப் விற்பனை: இளைஞா் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வில்லிவாக்கம் சிட்கோ நகா் 4-ஆவது பிரதான சாலைப் பகுதியில், போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு ஜன.8 வரை நீதிமன்றக் காவல்

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை ஜன. 8 வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சிக்னலில் மாநகா் பேருந்து வந்தால் பச்சை விளக்கு ஒளிரும் வகையில் தொழில்நுட்பம்: ஜனவரியில் சோதனை

பேருந்துகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் சிக்னலில் மாநகா் பேருந்து வந்தாலே, பச்சை விளக்கு ஒளிரும் வகையிலான தொழில்நுட்பத்தை ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி சாலையில் சோதனை செய்யப்படவுள்ளது. இத... மேலும் பார்க்க

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையப் பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னை, வில்லிவாக்கம் சிவசக்தி காலனியில், 4 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தீவுக்கு இயக்குநா் கே.பாலசந்தா் பெயா்

லஸ் சா்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு புதிதாக பெயா் சூட்டப்பட்ட ‘இயக்குநா் சிகரம் கே.பாலசந்தா் போக்குவரத்துத் தீவு’ பெயா்ப்பலகையை, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லக... மேலும் பார்க்க