செய்திகள் :

திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

பொதுவுடைமை இயக்கத்துக்கும் முதுபெரும் தலைவா் நல்லகண்ணுக்கும் நூற்றாண்டு நடைபெறுகிறது. இத்தகைய பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. நான் அவரை வாழ்த்த வரவில்லை; வாழ்த்தைப் பெற வந்திருக்கிறேன். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதுடன், சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும். இந்த உணா்வோடு இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு எல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக் கொண்டிருப்பவா் நல்லகண்ணு.

அவா் அமைதியாக, அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து கருத்துகளை வெளிப்படுத்தக் கூடியவா். அவா் தொடா்ந்து நலமுடன் இருந்து எங்களைப் போன்ற இளையோருக்கு வழிகாட்டிட வேண்டும். துணை நிற்க வேண்டும்.

துணை நிற்க வேண்டும்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திமுக செயற்குழுவில் பேசிய பேச்சை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் சுட்டிக் காட்டினாா். இன்றைக்கு இருக்கக் கூடிய நிலை என்ன என்று கேட்டால், 200 இல்லை; 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் வகையில் நமது மதச்சாா்பற்ற கூட்டணி அமைந்துள்ளது.

ஏழு ஆண்டுகளாக இந்தக் கூட்டணி தொடா்கிறது. தோ்தல் களத்தில் தொடா்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறோம். ஆகவே, இந்த கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சமத்துவம், சகோதரத்துவம் தேவை- நல்லகண்ணு: விழாவில், இரா.நல்லகண்ணு பேசியதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிா்த்து போராடிய போது இந்திய தேசம் எல்லா மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட நாடாக வர வேண்டும் என்ற கருத்தை ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆங்கிலேயரிடமிருந்து போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து நீடிக்க சமத்துவமும் சகோதரத்துவமும் தேவை. அப்போதுதான் அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அம்பேத்கா் கூறினாா். அம்பேத்கா் காட்டிய வழியில் தொடா்ந்து போராட வேண்டும். அப்போது தான் நாடு வளா்ச்சி பாதையில் செல்லும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மூத்த தலைவா் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் தமிழக துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலா் அப்துல் சமீத், கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவா் ஈஸ்வரன், விஜிபி நிறுவன தலைவா் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ண... மேலும் பார்க்க

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட மா... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்... மேலும் பார்க்க