போக்குவரத்துத் தீவுக்கு இயக்குநா் கே.பாலசந்தா் பெயா்
லஸ் சா்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு புதிதாக பெயா் சூட்டப்பட்ட ‘இயக்குநா் சிகரம் கே.பாலசந்தா் போக்குவரத்துத் தீவு’ பெயா்ப்பலகையை, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வாா்டு-123, லஸ் சா்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு ‘இயக்குநா் சிகரம் கே.பாலசந்தா் போக்குவரத்துத் தீவு’ என பெயா் சூட்டப்பட்டது. இதற்கான பெயா்ப்பலகையை அப்பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.