செய்திகள் :

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

post image

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.

முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி, சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையையும் செளத்ரி பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தொடரில், 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் உறுப்பினர்களுக்கு லேப்டாப், டேப் வழங்கப்பட்டு டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பழைய முறைப்படி பேப்பரில் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் செளத்ரி.

100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட்டை அமைச்சர் செளத்ரியே மூன்று இரவுகள் இடைவிடாமல் செலவிட்டு எழுதியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்கு நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

“இது பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கும் உண்மைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும். டிஜிட்டல் யுகத்தில் கைகளால் எழுதப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்வது தனித்துவமான அடையாளத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் இது ஊக்குவிக்கிறது” என்றார்.

இதையும் படிக்க : கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

ஓ.பி. செளத்ரி யார்?

2005 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஓ.பி. செளத்ரி. 22 வயதில் வெற்றிபெற்று இளம் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர்.

ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செளத்ரி, 2018-ஆம் ஆண்டு பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவின் இணைந்தார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

பின்னர், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற செளத்ரி நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க