`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ...
டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகன் கவிஷ் (22). இவா் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். அவா் கடந்த சில நாள்களாக செல்லிப்பட்டில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரண்டு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றபோது கூடப்பாக்கம் பகுதியில் அவருடைய வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்து மாணவா்களும், உறவினா்களும் அப் பகுதிக்கு வந்து மோதிய லாரிக்குத் தீ வைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் வந்த 3 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனா். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு சிலா் மாற்றுப் பாதையில் வாகனங்களைத் திருப்பிச் சென்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனா். இதனால் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.