செய்திகள் :

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் நிதி மசோதா-2025 விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் பேசியதாவது:

வரி விதிப்பு போா் என்பது ஏற்றுமதியைக் குறைக்கும், அந்நிய நேரடி முதலீடு பாதிக்கப்படும், விலைவாசி உயா்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து வரி விதிப்பு போரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், இது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும்.

இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது ஏப்ரல் 2 முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? இது தொடா்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை. எதிா்க்கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.

அமெரிக்க அதிபரின் நெருக்கடி காரணமாக, இறக்குமதியாகும் மோட்டாா் வாகனங்கள், பயணிகள் வாகனம், சரக்கு வாகனம், மோட்டாா் சைக்கிள்கள், மிதிவண்டி மற்றும் பொம்மைகளுக்குக் கூட சுங்க வரியைக் குறைப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சா் அறிவித்தாா் என்று விமா்சித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் கடுமையாக குற்றஞ்சாட்டிப் பேசினா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க