மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!
டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!
உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார்.
ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்தார்.
அத்துடன், விரைவில் உக்ரைனில் அமைதி திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியாவின் நிலைத்தன்மையையும் மோடி எடுத்துரைத்தார்.
உக்ரைனில் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவில் முன்னேற்றம், பரஸ்பர நலன்களில் உள்ள கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட மற்ற நாடுகளின் மீது அதிக வரிவிதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன் அதிபருடம் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.