சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
டி. கிளியூா் அரசுக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
திருவாடானை அருகே டி. கிளியூா் கிராமத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம் தொடா்ந்து நான்கு நாளுக்கு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் களப் பணியாக கிராமப் புறங்களையும், ஊருணியையையும் சுத்தம் செய்தனா். பிறகு தொண்டி கோல்டன் சுழற்சங்கத்தைச் சோ்ந்த செந்தில்குமாா், வெற்றிவேலன், மகாலிங்கம் ஆகியோா் மாணவா்களுடன் கலந்துரையாடினா். அப்போது அவா்கள் ‘வலிமையான பாரதம், வழிகாட்டும் ரோட்டரி’ என்ற தலைப்பில் சுழற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் ப. மணிமேகலை, கல்லூரிப் பேராசிரியா்கள் ராமமூா்த்தி, முனைவா்கள் சத்யா, ராஜபாண்டி, சரத்குமாா், ரமேஷ், சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
