செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி

post image

டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவம் மறந்துவிடப்படுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், விராட் கோலி மற்றும் க்ருணால் பாண்டியா இடையேயான சிறப்பான பார்ட்னர்ஷிப் பெங்களூரு அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் 7-வது வெற்றியை பெற்றுத் தந்தது.

விராட் கோலி கூறுவதென்ன?

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய விராட் கோலி, சவாலான ஆடுகளங்களில் டி20 கிரிக்கெட்டில் பார்ட்னஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் முக்கியம் எனப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு கிடைத்த வெற்றிகளில் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது மிகவும் கடினம். தில்லியில் நடைபெற்ற போட்டிகளில் ஆடுகளங்கள் மற்ற போட்டிகள் நடைபெறும் ஆடுகளங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.

இதையும் படிக்க: இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

சேஸிங் செய்யும் போது, நாம் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறோமா என்பதை அடிக்கடி உறுதிசெய்து கொள்வேன். எத்தனை ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் சூழல் எவ்வாறு இருக்கிறது. இன்னும் எந்த பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்கள் மீதமிருக்கிறது என்பது குறித்து திட்டமிடுவேன். ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதை நிறுத்த மாட்டேன். அதனால், அணிக்கு இக்கட்டான சூழல் உருவாகாது. பலரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீச்சாளர்களுக்கு சவாலளிக்கும் விதமாக விளையாடுவதை மறந்துவிடுகிறார்கள்.

களமிறங்கிய சிறிது நேரத்துக்கு க்ருணால் பாண்டியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின், நன்றாக விளையாடி ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் 9 ஆண்டுகளில் அவரது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். க்ருணால் பாண்டியா அற்புதமான வீரர். அவரால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பேட்டிங்கின்போது, நாங்கள் எங்களுக்குள் அதிகம் பேசிக் கொண்டோம். நான் பெரிய ஷாட்டுகளுக்கு முயற்சி செய்கிறேன், நீங்கள் களத்தில் இருங்கள் என க்ருணால் பாண்டியா கூறினார் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: முதல் சதம் விளாசினார் 14 வயது இளம் வீரர்!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசிய சாதனை படைத்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 சிக்ஸர்கள் அடங்கும்.ராஜஸ்தான்... மேலும் பார்க்க

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு எனது முதல் தெரிவு கே.எல்.ராகுல்தான் என தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல்... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அறிமுக வீரராக களமிறங்கும் ஆப்கன் ஆல்ரவுண்டர்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்... மேலும் பார்க்க

ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் லக்னெள அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன... மேலும் பார்க்க