டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை..! சஹால் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தனது 96ஆவது விக்கெட்டினை வீழ்த்தினார்.
இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
முதல் ஓவரில் 3ஆவது பந்திலேயே பிலிப் சால்ட் டக் அவுட்டானார். அடுத்ததாக 2.5ஆவது ஓவரில் பென் டக்கட்டை ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டின் மூலம் அர்ஷ்தீப் சிங் 97ஆவது விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்னதாக முதலிடத்தில் சஹால் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளுடன் இருந்தார்.
61 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டி20யில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள்
1. அர்ஷ்தீப் சிங் - 97
2. யுஸ்வேந்திர சஹால் - 96
3. புவனேஷ்வர் குமார் - 90
4. ஜஸ்பிரீத் பும்ரா - 89
5. ஹார்திக் பாண்டியா -89