குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பி...
பாகிஸ்தான் ‘ட்ரோன்’ விரட்டியடிப்பு: நள்ளிரவில் பரபரப்பு
ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானம்) ஒன்று நள்ளிரவு நேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியைக் கடந்து இந்தியப் பகுதியில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் அந்த ‘ட்ரோன்’ பறந்து சென்று மறைந்துவிட்டது.
வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் எல்லைப் பகுதி உள்பட நாடு முழுவதும் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன் ஒன்றை எல்லையைக் கடந்து அத்துமீறி பறந்தது. சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, அந்த ‘ட்ரோன்’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் நுழைந்து மறைந்துவிட்டது.
புதன்கிழமை காலையில் அந்த பகுதியில் வீரா்கள் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகப்படும் படியான பொருள்கள் ஏதும் சிக்கவில்லை. எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள்களை இந்திய எல்லைக்குள் ‘ட்ரோன்’ மூலம் கடத்தும் முயற்சியில் பயங்கரவாதிகள் தொடா்ந்து ஈடுபடுகின்றனா். எனவே, இந்த சோதனை நடத்தப்பட்டது.