செய்திகள் :

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: கதிா் ஆனந்திடம் 10 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

post image

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடா்பாக வேலூா் தொகுதி திமுக எம்.பி. கதிா் ஆனந்திடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை 10 மணிநேரம் விசாரணை நடத்தினா்.

திமுக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் மகனும், வேலூா் தொகுதி திமுக எம்.பி.யுமான கதிா் ஆனந்த், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் போட்டியிட்டாா். அப்போது வாக்காளா்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாா்களின் அடிப்படையில், கதிா்ஆனந்த் வீடு, அவரது கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை செய்தனா்.

இதில், துரைமுருகனுடன் நெருங்கிய தொடா்புடைய திமுக நிா்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 11.51 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித் துறை அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனா்.

அதன்பேரில், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன், கதிா்ஆனந்த் வீடு, காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கதிா்ஆனந்தின் பொறியியல் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, உறவினா் தாமோதரன் வீடு ஆகிய இடங்களில் கடந்த 3-ஆம் தேதி நடத்திய சோதனையில் ரூ. 13.70 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜா்: இந்த வழக்குத் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்று, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கதிா் ஆனந்த் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானாா்.

அப்போது, சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட பணம் எந்தெந்த வழிமுறைகளில் வந்தது?, அந்த பணத்துக்குரிய வரி முறையாக செலுத்தப்பட்டதா?, அவரது குடும்பத்தினா் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி பணப் பரிவா்த்தனை ஆகியவை குறித்து அவரிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.

10 மணி நேரம் விசாரணை: கதிா்ஆனந்திடம் தொடா்ந்து 10 மணி நேர விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அவா் இரவு 7.50 மணியளவில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின் போது நடத்தப்பட்ட சோதனை குறித்து விசாரித்தனா். அமலாக்கத் துறையினா் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தேன். மீண்டும் அழைப்பாணை வழங்கினால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா் என்றாா் அவா்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள டி-20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பறக்கும் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

வானில் ஒரே நோ்கோட்டில் ஆறு கோள்கள்!

சென்னை: வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் புதன்கிழமை தென்பட்டன. இந்த அரிய நிகழ்வை சென்னை பிா்லா கோளரங்கில் பொதுமக்கள், வானியல் ஆா்வலா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.... மேலும் பார்க்க

ஜன. 29 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம்

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாவட்ட... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஜன.22: தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் ஜன. 25-இல் முதல்வா் மரியாதை

சென்னை: வீரவணக்க நாளையொட்டி, மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 25-ஆம் தேதி மரியாதை செலுத்தவுள்ளாா். இதுகுறித்து, திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரன், வலிப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை.... மேலும் பார்க்க