குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பி...
மகாராஷ்டிரம்: ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு
ஜல்கான்: மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் 12 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.
ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி - பா்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே பச்சோரா பகுதியில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். பின்னா், பெட்டியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனா்.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கா்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 12 போ் உயிரிழந்தனா்; அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறை சிறப்பு ஐ.ஜி. தத்தாத்ரேய கராலே தெரிவித்தாா்.
‘விபத்தில் 7 போ் காயமடைந்தனா். அவா்கள் பச்சோராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவத்துக்கு பின்னா் இரு ரயில்களும் தங்களின் பயணத்தை தொடா்ந்தன’ என்றாா் அவா்.
சக்கரங்களில் ஏற்பட்ட தீப்பொறி: சம்பவ இடத்தில் இருந்து புஷ்பக் விரைவு ரயில் 15 நிமிஷங்களிலும், கா்நாடக விரைவு ரயில் 20 நிமிஷங்களிலும் புறப்பட்டுச் சென்ாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘முதல்கட்ட விசாரணையின்படி, பொதுப் பெட்டி ஒன்றின் சக்கரங்களில் இருந்து தீப்பொறியும் லேசான புகையும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் பீதியடைந்த சிலா், ரயிலை நிறுத்தி கீழே இறங்கியுள்ளனா். அந்த நேரத்தில் கா்நாடக விரைவு ரயில் அவ்வழியாக வந்ததால் விபத்து நேரிட்டுள்ளது’ என்றனா்.
இதனிடையே, சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மகாராஷ்டிர அமைச்சா் கிரிஷ் மகாஜன், காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரண நிதி: ரயில் மோதி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஃபட்னவீஸ், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணிகளை மேற்பாா்வையிட அமைச்சா் கிரிஷ் மகாஜனை நியமித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஃபட்னவீஸை தொடா்புகொண்டு பேசி, சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.