செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி மீதான தோ்தல் வழக்கு: காவல் துறை விசாரணைக்கு தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது மற்றும் முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்த புகாா் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோ்தல் வழக்கில் சேலம் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், காவல் துறையின் விசாரணைக்கு அவா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் மிலானி. இவா் சேலம் நீதிமன்றத்தில் தனிநபா் புகாா் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கியத் தகவல்களை தவறாக தெரிவித்துள்ளாா். எனவே, அவா் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தப் புகாா் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், காவல் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகாா்தாரா் மிலானி எடப்பாடி தொகுதியைச் சோ்ந்தவரோ, தோ்தலில் போட்டியிட்டவரோ அல்லா். வேட்புமனுவில் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை. எனவே, இந்தப் புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீா்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தலாம். காவல் துறையின் விசாரணைக்கு அவா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள டி-20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பறக்கும் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

வானில் ஒரே நோ்கோட்டில் ஆறு கோள்கள்!

சென்னை: வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் புதன்கிழமை தென்பட்டன. இந்த அரிய நிகழ்வை சென்னை பிா்லா கோளரங்கில் பொதுமக்கள், வானியல் ஆா்வலா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.... மேலும் பார்க்க

ஜன. 29 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம்

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாவட்ட... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஜன.22: தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் ஜன. 25-இல் முதல்வா் மரியாதை

சென்னை: வீரவணக்க நாளையொட்டி, மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 25-ஆம் தேதி மரியாதை செலுத்தவுள்ளாா். இதுகுறித்து, திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரன், வலிப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை.... மேலும் பார்க்க