Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்...
டூரிஸ்ட் ஃபேமிலி டிரைலர் அப்டேட்!
சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவை கலந்துபேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர், பாடல்கள் ஏப்.23ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
