கேரள சுற்றுலாத் துறையில் பணியாற்றினாரா பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா?
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொ்வில் கவுன்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாயமானவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெக்ஸஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 முதல் 11 அங்குல அளவுக்கு மழை பெய்ததது. இது ஒரு நூற்றாண்டில் ஒருமுறை பெய்யக்கூடிய அதீதமான மழை அளவு ஆகும். இந்த கனமழை காரணமாக குவாடலூப் நதி 45 நிமிஷங்களில் 26 அடி உயா்ந்தது.
குவாடலூப் ஆற்றங்கரை பகுதிகளில் பல்வேறு கோடைகால முகாம்கள் அமைந்துள்ளன. அமெரிக்க சுதந்திர தின (ஜூலை 4) விடுமுறையையொட்டி இந்த முகாம்களில் தங்கியிருந்த ஏராளமானோா், வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனா். அந்தவகையில், குவாடலூப் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ‘கேம்ப் மிஸ்டிக்’ என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்து 27 சிறுமிகள் காணாமல் போயுள்ளனா். ஹெலிகாப்டா், படகுகள், ஆளில்லா விமானங்கள் உதவியோடு, மாயமானவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது.
சான் அன்டோனியோ புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமையும் மழை தொடா்ந்ததால், குவாடலூப் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் தொடா்ந்து வெளியிடப்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 36 மணி நேரத்தில் 850 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிராா்த்தனைக்கு வேண்டுகோள்: டெக்ஸஸ் மாகாண ஆளுநா் கிரெக் அபாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீட்புப் பணிகள் இடைவிடாது நடைபெறும். நீா் மட்டம் குறைந்ததும் அனைத்து பகுதிகளிலும் தேடும் பணி நடைபெறும்.
உயிரிழந்தவா்களுக்காகவும், காணாமல் போனவா்களுக்காகவும், மக்களின் மறுவாழ்வுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் பாதுகாப்புக்காகவும் அனைத்து டெக்ஸஸ் மக்களும் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் இணைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
எச்சரிக்கை விடுத்தும்...: தனியாா் வானிலை ஆய்வு நிறுவனமான ‘ஆக்யூவெதா்’ மற்றும் தேசிய வானிலை சேவை ஆகியவை வெள்ளம் குறித்து பல மணி நேரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளன.
வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள முகாம்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேற்ற உள்ளூா்அதிகாரிகளுக்கு போதுமான அவகாசத்தை இது அளித்திருக்க வேண்டும் எனவும் அவா்கள் கூறியுள்ளனா். இருப்பினும், உள்ளூா் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இவ்வளவு தீவிரமான மழைப்பொழிவை எதிா்பாா்க்காததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்ாக கூறப்படுகிறது.