செய்திகள் :

டெக்ஸாஸ் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம் - 'ட்ரம்ப், மஸ்க்' குற்றம்சாட்டப்படுவது ஏன்?

post image

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் நியூ யார்க் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது.

இந்த வெள்ளம் அமெரிக்க மாகாணத்தின் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு அமைப்புகளின் திறனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. இன்றுவரை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்

வெள்ளம் ஏற்பட காரணம் என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை இரவில் டெக்ஸாஸ் ஹில் கன்ட்ரியில் (மலை நாடு), பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இது மத்திய மற்றும் தெற்கு டெக்ஸாஸ் வரை பரவியிருக்கும் பகுதியாகும்.

வெறும் இரண்டு மணி நேரத்துக்குள் குவாடலூப் ஆறு கரைகளைக் கடந்து இரண்டு மாடி கட்டட அளவுக்கு (சுமார் 9 மீ) உயர்ந்துள்ளது. வெள்ளம் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மண் உறிஞ்ச முடியாத அளவு குறைந்த நேரத்தில் அதீத மழைப் பொழிந்துள்ளது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் நீர் பெருகி ஓடியதும், ஆழமற்ற மணற்பரப்பும் வெள்ளம் வரக் காரணமாக இருந்துள்ளது.

வெேள்ளம்

சுடு காடான கெர் கவுண்டி!

வெள்ளத்தால் அதிகபட்சம் பாதிக்கப்பட்ட பகுதியாக கெர் கவுண்டி உள்ளது. 52,000 பேர் வசிக்கும் இந்த கவுண்டியில் அடிக்கடி வெள்ளம் ஏறப்டுவது வழக்கம் என்கின்றனர்.

பதிவுகளின்படி, 1936, 1952, 1972, 1973, 1978, 1987, 1991 மற்றும் 1997 ஆண்டுகளில் அங்கு தீவிரமான பெரு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

அங்கு நடைபெற்ற பெண்களுக்கான கிறிஸ்தவ கோடைக்கால முகாம் 'கேப் மிஸ்டிக்கில்' 27 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த சில பெண் குழந்தைகளும் முகாம் ஆலோசகரும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெள்ளத்தில் சிதைந்த மிஸ்டிக் கேம்ப்
வெள்ளத்தில் சிதைந்த மிஸ்டிக் கேம்ப்

கெர் கவுண்டியில் மட்டும் 87 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 குழந்தைகள் அடக்கம்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள்... புகைப்படங்களாக...

Texas Flood : அமெரிக்காவின் டெக்ஸாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்! - பாதிப்பு காட்சிகள் | Album

அரசு மீது விமர்சனம் ஏன்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க் தலைமையில் இயக்கிய அரசு செயல்திறன் துறை (DOGE) தேசிய வானிலை சேவைக்கு ஒதுக்கி வந்த நிதியைக் குறைக்கும் வகையில் பலரை பணியிலிருந்து நீக்கியது.

கடந்த ஜூன் மாதம் மட்டுமே 600 பேர் வேலை இழந்தனர். பல அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியிருக்கின்றன.

காலநிலை மாற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அமெரிக்க அரசு நிறுவனமான தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் (NOAA) செலவுகளைக் குறைக்க செயல்பாடுகளை முடக்கியது.

இந்த நவடிக்கைகளால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுப்பதும் மீட்பு பணிகளை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலுக்கு மத்தியில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ் கிறீஸ் நாட்டில் வெகேஷனுக்கு சென்றது பெரும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

Rocky: நிலச்சரிவிலிருந்து 67 பேர் உயிரைக் காத்த நாய்குட்டி - இமாச்சலில் மனதை உருக்கும் சம்பவம்!

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை தொடங்கியது முதல் பல்வேறு மேகவெடிப்பு நிகழ்வுகளால் மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பகுதியாக கடந்த ஜூன் 26ம் தேதி மண்டி ... மேலும் பார்க்க

Himachal Rains: 69 பேர் மரணம்; ரூ.700 கோடி இழப்பு... இமாச்சலை புரட்டிப்போட்ட பருவமழை!

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அதீத மழைப்பொழிவு மற்றும் மேகவெடிப்பால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 69 பேர் பலியாகியுள்ள நிலையில் 700 கோடிக்கும் அதிகமான மதிப்புடை... மேலும் பார்க்க