செய்திகள் :

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், தந்தையால் சுட்டுக் கொலை! காரணம் என்ன?

post image

ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காரணம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியிருந்தார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்த நிலையில், வியாழக்கிழமை, அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

49 வயதாகும் தீபக் யாதவ், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ராதிகாவை சுட்டதில், மூன்று குண்டுகள் அவரது உடலில் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

இது குறித்து விசாரணை நடத்தி, தீபக் யாதவை கைது செய்த காவல்துறையினர், ராதிகா யாதவ், சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பாகவும், ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுத்துப் போடுவது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின்போதுதான், தீபக், தனது கைத்துப்பாக்கியை எடுத்துவந்து மகளை சுட்டுக் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, ராதிகாவின் தாய் மற்றும் அண்ணன் இருவரும் வீட்டில்தான் இருந்துள்ளனர். அவர்கள்தான் ராதிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

டென்னிஸ் விளையாட்டில் வளரும் நட்சத்திரமாக, ராதிகா இருந்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 113வது இடத்தைப் பிடித்திருந்தார். ஹரியாணா மாநில அளவில், இரட்டையர் அணயில் நான்காவது இடத்தில் இருந்துள்ளார்.

Tennis player Radhika Yadav was shot dead by her father, and the reason behind it

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க