F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
டோமினிக் கதையைக் கேட்டதும் மம்மூட்டி உடனடியாக ஒப்புக்கொண்டார்: கௌதம் மேனன்
நடிகர் மம்மூட்டி டோமினிக் கதையைக் கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம் நாளை (ஜன. 23) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில், கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளனர். துப்பறியும் காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி நடித்திருப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: கே லவ் ஸ்டோரி டிரைலர்!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கௌதம் மேனன், “டோமினிக் கதை ஒரு மருத்துவர் எழுதியது. இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்ததால், இதில் நடிகர் மம்மூட்டி நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கொண்டு சென்றேன். கதை கேட்பதற்கு முன், மலையாளத்தில் அதிகமாக துப்பறியும் கதைகளாகவே வந்துகொண்டிருப்பதாக மம்மூட்டி யோசித்தார்.
ஆனால், நான் கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்துபோக, தானே தயாரிப்பதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை ஆரம்பிக்க சொன்னார். என் திரைப்படங்களிலேயே விரைவாக இயக்கி முடித்த படம் டோமினிக்தான்” எனத் தெரிவித்தார்.