செய்திகள் :

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர். வீரமுத்துக்கும், அவரது மனைவிக்கும் கருது வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதுவும், சில மாதங்களாகவே கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்துள்ளன. இதனால், கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு அவரது மனைவி சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முன்புதான் மனைவியைக் கல்லுப்பள்ளத்திலிருந்து, கீழக்காயம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் வீரமுத்து.

இந்நிலையில், இருவரும் நேற்று முன் தினம் (ஏப்ரல் 26) இரவு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் போடப்பட்ட நாடகத்தைப் பார்க்கச் சென்றுவிட்டு நேற்று (ஏப்ரல்) அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீரமுத்துவின் வீடு
வீரமுத்துவின் வீடு

ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் வீரமுத்து மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்பட்டிவிடுதி காவல் நிலைய போலீஸார் உடல்களைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தம்பதியினர் இருவரும் இறந்துபோயுள்ளதால், அவர்களது மூன்று குழந்தைகளும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

மனைவியோடு ஏற்பட்ட தகாறில் அவரைக் கொலை செய்துவிட்டு கணவர் தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்ற... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக ... மேலும் பார்க்க

Canada: திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த SUV கார்; பலர் பலி, ஏராளமானோர் படுகாயம் - நடந்தது என்ன?

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழை... மேலும் பார்க்க