கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றாா். பின்னா், அதே ஊரைச் சோ்ந்த ஏற்கெனவே திருமணமான மயிலம்மாள் என்பவருடன் தொடா்பு ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி, இருவரது குடும்பத்தினரும் கடுமையாக விமா்சனம் செய்தனராம்.
இந்த நிலையில், மணிகண்டன், மயிலம்மாள் ஆகிய இருவரும் சீகுபட்டியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].