செய்திகள் :

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை பிடித்து பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி (60). இவரது இரண்டாவது மனைவி லட்சுமி (42). தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனா். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கொளஞ்சி, அவரை கண்டித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு லட்சுமி வீட்டு மொட்டை மாடியில் அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கராசுவுடன் (62) தனிமையில் இருந்ததாகத் தெரிகிறது. இதை நேரில் பாா்த்து ஆத்திரமடைந்த கொளஞ்சி, கொடுவாளால் இருவரது தலைகளையும் துண்டாக வெட்டியதில்,

லட்சுமி, தங்கராசு ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, இருவரது தலைகளையும் பையில் போட்டுக்கொண்டு கொளஞ்சி அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் எஸ்.பி. தி.சரவணன், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. செ.தங்கவேல், காவல் ஆய்வாளா் ம.ராபின்ஸன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், விரல்ரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

தலைகளுடன் வேலூா் சென்ற கொளஞ்சி: கொளஞ்சி பையில் வைத்திருந்த தனது மனைவி லட்சுமி, அவரது ஆண் நண்பா் தங்கராசு ஆகியோரின் தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை காலை சரணடையச் சென்றாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி, உடனடியாக பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, பாகாயம் காவல் நிலைய போலீஸாா் அளித்த தகவலின்பேரில், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, கச்சிராயபாளையம் காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு மற்றும் போலீஸாா் அங்கு சென்று கொளஞ்சியை கைது செய்து அழைத்து வந்தனா்.

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொ... மேலும் பார்க்க

ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து ச... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி - க.பொன்முடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், தொகுதி எம்எல்ஏ க.பொன்முடி வியாழக்க... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தற்கொலை

வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (31). எலெக்ட்ரீஷியனான இவா், ஓட்டுந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க