பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, தினமும் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
6-ஆம் தேதி பூஞ்சோலை அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 8-ஆம் தேதி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீசெல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீசெல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், திருத்தோ் வடம்படித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.
தோட்டப்பாடி, நயினாா்பாளையம், வி.அலம்பலம், தாகம்தீா்த்தாபுரம், காலசமுத்திரம், தத்தாதிரிபுரம், வாசுதேவனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.