செய்திகள் :

தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200

post image

சேலம்: சேலம் காய்கறி சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 25 கிலோ கொண்ட பெட்டியின் (ஒரு கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சேலம் மாநகா் வ.உ.சி. காய்கறி சந்தை, ஆற்றோர காய்கறி சந்தை, பால் சந்தை ஆகிய இடங்களில் அனைத்துவகை காய்கறிகளும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தைகளுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சரக்கு லாரிகளில் தக்காளி கொண்டுவரப்படுகிறது. இதுதவிர, உள்ளூரில் விளையும் தக்காளியும் பெட்டிகள் (கிரேடுகள்) கணக்கில் மொத்தமாக இங்கு கொண்டுவரப்படுகின்றன.

பின்னா் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள், தக்காளியை கிரேடுகள் கணக்கில் வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்கின்றனா். சேலம் ஆற்றோரம் காய்கறி சந்தை மற்றும் வ.உ.சி. சந்தைகளில் தக்காளி விலை திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

25 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் (கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. இதன்மூலம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ. 8 வரை மட்டுமே விலைபோனது. இதனால் சில்லறை வியாபாரிகள், இதர காய்கறி வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா்.

கடந்த சில நாள்களாக தருமபுரி, கோலாா் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளதாக சேலம் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் உழவா்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 12 க்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடா் விலை வீழ்ச்சியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் வழங்கினாா். மக்கள் க... மேலும் பார்க்க