செய்திகள் :

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

post image

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளுமான ரன்யா ராவ் (33), துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.

கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருப்பதும், துபைக்கு அடிக்கடி சென்றுவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ரன்யா தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : தங்கம் கடத்தல் நடிகை ரன்யா ராவுக்கு வலை விரித்தது எப்படி? பரபரப்பான பின்னணித் தகவல்கள்!

இந்த மனுவின் விசாரணைக்காக புதன்கிழமை ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், விமான நிலையத்தில் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால், ரன்யா ராவுக்கு சலுகைகள் வழங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நடத்திய விசாரணையின்போது, காவல் உயர் அதிகாரியின் மகள் என்பதால் காவல்துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், விமான நிலையங்களில் உயா்காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சோதனை விலக்கு சலுகைகள் நடிகை ரன்யா ராவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு முறையும் ரன்யா ராவ் வருகைதரும் விமானம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவரின் பேக்குகளை விரைவாக எடுக்க ஏற்பாடு செய்து, விஐபி வழியில் அனுப்பியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வருவாய் புலனாய்புப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ரன்யா ராவ் ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, ரன்யா ராவின் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, தங்கம் கடத்தல் விவகாரத்தில் டிஜிபி கே.ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைமைச் செயலாளா் கௌரவ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை !

மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடு போன சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் இரு நாள்களுக்கு முன் அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு 91 பயங்கரவாதிகள் செ... மேலும் பார்க்க

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க