பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
நிகழாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரன் சுமார் ரூ.20,000-க்கும் மேல் உயர்ந்தது.
சென்னையில் இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், கடந்த 9-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200-க்கும், 10, 11 ஆகிய தேதிகளில் விலையில் மாற்றமின்றியும் விற்பனையானது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.81,920-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை சற்றுக் குறைந்து, ரூ.81,760-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 10,210-க்கும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் இன்றே கடைசி!