கில் சதம்..! கோலி, ஸ்ரேயாஸ் அதிரடியால் இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு!
தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 63,520-க்கு விற்பனையாகிறது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயர்ந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
அதைத்தொடா்ந்து வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து சவரன் ரூ. 64,480-க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 8060-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க | ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அதிரடி விலை ஏற்றங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 7,940-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.30 குறைந்து ரூ.99.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,300 உயா்ந்து ரூ. 99,200-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.