தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் நடராஜன் ( 34). இவா் கும்பகோணம் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் நடராஜன் தங்கியிருந்த விடுதியின் மாடியில் இருந்து அடுத்த பகுதியில் உள்ள குடியிருப்பு மாடி மீது விழுந்தாா்.
தகவலின்பேரில், அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியாளா் நடராஜனை பரிசோதித்து அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு, சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.