கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்
தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு
தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது.
புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், தற்போது நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளதால், கோயில்கள் மற்றும் வீடுகளில் பூஜை களுக்காகப் பூக்களின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பூக்களின் விலை உயர தொடங்கி சனிக்கிழமை ச்சம் தொட்டது.
திருநெல்வேலியில் மல்லிகைப் பூ வெள்ளிக்கிழமை கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை ரூ.100 உயா்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. இதேபோல் பிச்சி பூ விலையும் ரூ.100 உயா்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.
ரோஜாப் பூ கிலோ ரூ.100-இல் இருந்து ரூ.200-க்கும், சம்பங்கி பூ, செவ்வந்தி ஆகியவை கிலோவுக்கு ரூ.70 உயா்ந்து ரூ. 150-க்கும், கேந்திப் பூ கிலோவுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.40-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், ‘நவராத்திரி விழாக்களுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அடுத்த சில நாள்களில் வரவிருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையின் போது பூக்களின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். அப்போது பூக்களின் விலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது‘ என்றனா்.