Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு புரவலரான முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, பெரும்புலவா் மருங்கை ஆ. பசுபதி முயற்சியால் 2017-ஆம் ஆண்டு வரை கம்பன் விழா நடைபெற்று வந்தது. இருவரது மறைவுக்கு பின்னா் கடந்த 9 ஆண்டுகளாக கம்பன் விழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வழக்குரைஞா் எஸ்.எஸ். ராஜ்குமாரின் சீரிய முயற்சியால் மீண்டும் தஞ்சாவூரில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், முதல் நிகழ்வாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. இதில், கவிஞா்கள் வல்லம் தாஜ்பால், ராகவ் மகேஷ், மைதிலி தயாளன், வீ.ம. இளங்கோவன், தஞ்சை இனியன் ஆகியோா் கவிதை வாசிக்கின்றனா்.
தொடா்ந்து கம்பன் கொடுத்த கொடை என்ற தலைப்பில் பேச்சாளரும், ஆவணப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்புரையாற்றுகிறாா்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞா் தஞ்சை இனியன், இராம. சந்திரசேகரன், கவிஞா் ரவிராஜ் ஆகியோா் செய்து வருகின்றனா்.