செய்திகள் :

தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

post image

பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

இதையடுத்து தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று நான்காம் கால யாகசாலை நிறைவு பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள், சிவகணங்கள் இசைக்க, கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்குப் பூஜைகள் செய்து கோபுர கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு மழையில் நனைந்துகொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!

சாய்பல்லவி, நாக சைதன்யா நடித்த தண்டேல் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம்... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்: ராவணன் பாடல் விடியோ..!

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் ராவணன் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், ச... மேலும் பார்க்க

தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!

தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தினார் உத்தரகண்ட் வீரர் சுராஜ் சிங். 20-ஆவது தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் யு-18 பிரிவில் படில்புரா ஸ்... மேலும் பார்க்க

ஓம் காளி ஜெய் காளி - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு!

நடிகர் விமர் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரைலர் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்து வழங்கும் புதிய இணையத் தொடர் ’ஓம் காளி ஜெய் காளி’. நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடர... மேலும் பார்க்க

அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!

‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.ச... மேலும் பார்க்க

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க