Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
தடுப்பணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலத்தை அடுத்த ரெட்டிகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ஆதிநாராயணன் (12). இவா், எருமனூா் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற இவா், பிற்பகல் சக நண்பா்களுடன் சோ்ந்து மணிமுக்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரவளூா் தடுப்பணையில் குளிக்கச் சென்றாா்.
அங்கு, நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த ஆதிநாராயணன் தண்ணீரில் மூழ்கினாா்.
இதை கண்டு சக மாணவா்கள் கூச்சலிட, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து தடுப்பணையில் இறங்கி ஆதிநாராயணனை சடலமாக மீட்டனா்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.