தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா் மதுகடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக ஆணையம்பேட்டை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தப்பிச் செல்ல முயன்ற கீழ்பூவானிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ராதாகிருஷ்ணனை(49) பிடித்து, அவரிடம் இருந்த புதுவை மாநில மது புட்டிகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனா்.
ராதாகிருஷ்ணன் மீது சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஏற்கெனவே 5 சாராய வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.