செய்திகள் :

``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீனா பதிலடி

post image

"ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, நேட்டோ நாடுகள் சீனா மீது 50 - 60 சதவிகித வரி விதிக்க வேண்டும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. ரஷ்யா மீது வரி விதிக்க வேண்டும்" என்று நேற்று ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சீனாவின் பதிலடி

இதற்கு பதிலடி தரும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றில், சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, "சீனா அமைதியை நிலைநாட்டுவதிலும், முக்கிய பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலும் முனைப்பாக இருக்கிறது.

போர் எந்தப் பிரச்னையையும் தீர்க்காது. தடைகளும், வரிகளும் பிரச்னைகளை இன்னும் மோசமாக்கும்" என்று பேசியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காத அமெரிக்கா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக ரஷ்யா மீது எந்தவொரு வரியையும் இன்னும் அமெரிக்கா விதிக்கவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தில் கூட, நேட்டோ நாடுகள் ரஷ்யா, சீனா மீது வரியை விதித்தால் தான், அமெரிக்கா விதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு நேட்டோ நாடுகள் எப்படி பதிலளிக்க உள்ளதோ?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா கார்கி - அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எப்போது?

இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.வன்முறைக்கு ... மேலும் பார்க்க

``மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த புதிய புதிய சாலைகளை அமைத்து வருகிறார். அதேசமயம் எரிபொருளில் எத்தனாலை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்... மேலும் பார்க்க

TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள்

தவெக தலைவர் விஜய் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கியிருக்கிறார். திருச்சி மற்றும் அரியலூரில் மக்களிடையே உரையாடியவர், குன்னம் வரை மக்களை சந்த... மேலும் பார்க்க

``டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல், மேலிடம் வரை எல்லோருக்கும் தொடர்பு'' - எடப்பாடி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது... மேலும் பார்க்க

பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி

பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது. பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142... மேலும் பார்க்க

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.என்ன போராட்டம்? நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்... மேலும் பார்க்க