செய்திகள் :

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!

post image

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.

இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.

இதையும் படிக்க : 2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!

குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஐஆர்சிடிசி தளம் செயலிழந்து காணப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இ-டிக்கெட் சேவை மூலம் தற்போது முன்பதிவு செய்ய இயலாது என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த செய்தியை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி வரும் வாடிக்கையாளர்கள், அவசர பயணத்துக்காக தட்கலில் முன்பதிவு செய்யும்போது, இதுபோன்று செயலிழந்து காணப்பட்டால் என்ன செய்ய முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய ரயில்வேவின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

மேலும், உலகின் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட இந்தியாவின் ரயில்வே செயலியை இடையூறு இன்றி உபயோகிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப்... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர் மன்மோகன் சிங்: சித்தராமையா

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)உடல்ந... மேலும் பார்க்க